/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூட்டை உடைத்து நகை திருட்டு புவனகிரி கோவிலில் துணிகரம்
/
பூட்டை உடைத்து நகை திருட்டு புவனகிரி கோவிலில் துணிகரம்
பூட்டை உடைத்து நகை திருட்டு புவனகிரி கோவிலில் துணிகரம்
பூட்டை உடைத்து நகை திருட்டு புவனகிரி கோவிலில் துணிகரம்
ADDED : செப் 30, 2025 08:47 AM
புவனகிரி : மருதுார் அருகே கோவிலின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புவனகிரி தாலுகா, மருதுார் அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் அம்மன் கோவில் உள்ளது. பூஜைகள் முடிந்து நேற்றிரவு பூசாரி, கோவிலை வழக்கம் போல் பூட்டிச் சென்றார். நேற்று காலை கோவிலை திறக்க வந்த போது, பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, உண்டியலை உடைத்து காணிக்கையையும், அம்மன் கழுத்தில் இருந்த 20,000 ரூபாய் மதிப்பிலான செயினையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.