/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவிலில் நகை திருட்டு; நெல்லிக்குப்பம் அருகே துணிகரம்
/
கோவிலில் நகை திருட்டு; நெல்லிக்குப்பம் அருகே துணிகரம்
கோவிலில் நகை திருட்டு; நெல்லிக்குப்பம் அருகே துணிகரம்
கோவிலில் நகை திருட்டு; நெல்லிக்குப்பம் அருகே துணிகரம்
ADDED : ஜன 02, 2025 06:55 AM
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார்- பண்ருட்டி சாலையில், நெல்லிக்குப்பம் அருகே குமராபுரத்தில் 41 அடி உயர காரியசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.  இந்த சிலையின் கிழே மூலவருக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளை முடித்து கோவில் பட்டாச்சாரியார் லஷ்மி நாராயணன் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை வந்து பார்த்தபோது,  மூலவர் சன்னதி கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மூலவர் சிலையில் சாத்தப்பட்டிருந்த 6 கிராம் தங்க கண்மலர், திருமண் ஆகியன திருட்டு போயிருந்தன.
நெல்லிக்குப்பம் போலீசில் பட்டாச்சாரியார் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.