ADDED : ஜன 21, 2026 06:40 AM
கடலுார்: கடலுாரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுதினம் நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த ப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாளை மறுதினம், எண்:8, ஆற்றங்கரைத்தெரு, புதுப்பாளையம், நியூசினிமா தியேட்டர் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வ ழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளன.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண் டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

