ADDED : மார் 01, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வளாக நேர்காணல் நடைபெற்றது.
இதில் லார்சன் & டூப்ரோ, லுாகாஸ் டி.வி.எஸ்., டெக் மஹிந்திரா, எம்.ஆர்.எப்., ரானே மற்றும் டெக் இந்தியா இன்போவே உட்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், முகாமில், பங்கேற்று மாணவ மாணவிகளிடம் நேர்காணல் நடத்தியது.
இம்முகாமில், 500க்கும் மே ற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதில், 400 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். முன்னதாக வேலை வாய்ப்பு முகாமை கல்லுாரி செயலர் பாபு துவக்கி வைத்தார்.
முதல்வர் மாலதி, கல்வி அதிகாரி, அசோக்கு மார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சண்முக சுந்தரம் ஒருங்கிணைத்தார்.
