/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் பண்டிகை முன்னிட்டு மஞ்சள் கொத்து விற்பனை 'ஜோர்'
/
பொங்கல் பண்டிகை முன்னிட்டு மஞ்சள் கொத்து விற்பனை 'ஜோர்'
பொங்கல் பண்டிகை முன்னிட்டு மஞ்சள் கொத்து விற்பனை 'ஜோர்'
பொங்கல் பண்டிகை முன்னிட்டு மஞ்சள் கொத்து விற்பனை 'ஜோர்'
ADDED : ஜன 13, 2024 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விற்பனையாகும் மஞ்சள் கொத்துகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில், மஞ்சள் கொத்து கட்டிய மண் பானையில், வெல்லம், பச்சரிசி, நெய் உள்ளிட்ட பொருட்களால் பொங்கலிட்டு, பன்னீர்கரும்பு வைத்து, சூரியனை வழிபடுபவர்.
இதையொட்டி, விருத்தாசலம் கடைவீதி, பாலக்கரை ஆகிய பகுதிகளில் மஞ்சள் கொத்துகள் குவித்து வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூ.10 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.