ADDED : பிப் 26, 2026 05:15 AM

கடலுார்: கடலுாரில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில் ஜெ.,பிறந்தநாள் விழா நடந்தது.
அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச்செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், பஸ்நிலையம் நாகம்மன் கோவிலில், மண்டலாபிஷேக ஆராதனை செய்து இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள், புதுப்பாளையம் ராஜ கோபாலசாமி மற்றும் பாடலீஸ்வரர் கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாநகராட்சி கவுன்சிலர் பரணிமுருகன் ஏற்பாட்டில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் வினோத்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் தக்ஷணா, பரணிமுருகன், நெசவாளர் பிரிவு குணசேகரன், வீரமணி, எம்.ஜி.ஆர்.,மன்ற துணைச்செயலாளர்கள் ரவி, அசோகன், ஆனந்தராஜா, முன்னாள் நகர எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் ராஜி, கோவிந்தன், மாவட்ட ஜெ.,பேரவை துணைச்செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் பிரபாகரன், கிளை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட மீனவர் அணி துணைச்செயலாளர் விவேக், தெற்கு மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் முருகன், பேச்சாளர் தாஸ், பன்னீர், செல்வம், குமரவேல், இளங்கோ, ராஜாராம், அருள், கார்த்தி, ஆகாஷ், முருகானந்தம், நரேஷ், ஞானவேல், பரமசிவம், ஜெயவீரன், ராஜேந்திரன், பிரவீன், வினோத், பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

