ADDED : செப் 18, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுார் சபையில் ஜோதி தரிசனம் காண பக்தர்கள் குவிந்தனர்
வடலுார் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. நேற்று பூசம் நட்சத்திர தினத்தையொட்டி, இரவு 7:45 மணி முதல், 8:30 மணி வரை, சபையில், 6 திரைகள் விலக்கப்பட்டு, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
மொத்தம், 3 காலங்களாக காண்பிக்கப்பட்ட ஜோதியை, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கோஷம் முழங்க, சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.