/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 4 பேரை கடலுார் மீனவர்கள் மீட்டனர்
/
படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 4 பேரை கடலுார் மீனவர்கள் மீட்டனர்
படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 4 பேரை கடலுார் மீனவர்கள் மீட்டனர்
படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 4 பேரை கடலுார் மீனவர்கள் மீட்டனர்
ADDED : டிச 12, 2024 08:15 AM
அரியாங்குப்பம்; மீன்பிடிக்கச் சென்றபோது படகு இன்ஜின் பழுதாகி, நடுக்கடலில் தத்தளித்த நான்கு பேரை, கடலுார் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமா, நேற்று புதுச்சேரியில், மழை பெய்தது. கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மேகநாதன் என்பவரின் பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள், நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று காலை, வெகு நேரம் ஆகியும் அவர்கள் கரை திரும்பவில்லை.
இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின்பேரில், கடலோர காவல் படையினர் மீனவர்களை தேடி கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில், நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும், அந்த வழியாக சென்ற கடலுார், தேவனாம்பட்டினம் மீனவர்கள், தங்களது படகில் மீட்டு, அழைத்து வந்து, கடலுாரில் விட்டனர். பழுதான படகையும், கயிறு கட்டி இழுத்து வந்தனர்.
மீன் பிடித்து விட்டு, கரை திரும்பும் போது, படகு இன்ஜின் திடீரென பழுதானது. மேலும் மொபைல் போன் சிக்னல் கிடைக்காததால், கடலில் தத்தளித்த போது, கடலுார் மீனவர்கள் தங்களை மீட்டு வந்ததாக தெரிவித்தனர்.