/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கம்மாபுரம் ஒன்றிய பா.ம.க., ஆய்வுக் கூட்டம்
/
கம்மாபுரம் ஒன்றிய பா.ம.க., ஆய்வுக் கூட்டம்
ADDED : டிச 09, 2024 07:35 AM

மந்தாரக்குப்பம் : கம்மாபுரம் கிழக்கு ஒன்றிய பா.ம.க.,, ஆய்வுக் கூட்டம் மந்தாரக்குப்பத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.
மாநில இளைஞரணி செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர் பழனி வேல், ஒன்றிய தலைவர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், மாவட்ட தலைவர் தேவதாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், இளைஞர் அணி துணைதலைவர் பூவராகவன், வழக்கறிஞர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதில் கம்மாபுரம் ஒன்றியத்தில் என்.எல்.சி., யால் பாதிக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் என்.எல்.சி., நிர்வாகம் மருத்துவ முகாம் நடத்திட வலியுறுத்தியும், என்.எல்.சி., சி.எஸ்.ஆர்., நிதி மூலம் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும், கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஏரிகள், குளங்கள் துார் வாரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.