ADDED : ஜூலை 25, 2025 02:45 AM

பண்ருட்டி: பண்ருட்டி ஹஜரத் நுார் முகம்மது அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் சந்தன கூடு விழா நடந்தது.
பண்ருட்டி காந்திரோடு ஹஜரத் நுார் முகம்மது அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி மவுலுாத் ஷரிப் ஓதி சீரணி வழங்குதல், நேற்று முன்தினம் அவுலியாவின் ரவுலா ஷரீப் பீடத்தை பூ போர்வையால் அலங்கரித்து சந்தன கலசம் கூண்டில் ஏற்றறப்பட்டு சந்தனகூடு ஊர்வலம் நடந்தது.
இன்று 25ம் தேதி தர்காவில் குர்ஆன் ஷரீப்ஓதி ஹத்தம் செய்து ஹதியா செய்தல், துஆ செய்தல் நடக்கிறது. வரும் 28ம் தேதி மாலை கொடியிறக்கம் நடக்கிறது.
ஏற்பாடுகளை ஜேப்பியார் ஸ்டீல் உரிமையாளர் ஜாகீர்உசேன், தர்கா டிரஸ்டி தலைவர் சித்திக்பாஷா, டிரஸ்டி அபுல்கலாம் ஆசாத், உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், முகமது காசீம், ஜூபைர்அலி கொண்ட குழுவினர் செய்து வருகின்றனர்.