ADDED : டிச 15, 2024 08:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: சின்னவடவாடியில் நடந்த கன்னி பூஜை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் சன்னதியில் நேற்று கன்னிபூஜை விழா நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து, காலை 9:00 மணியளவில் சின்னவடவாடி ஏரியில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் கலர் பொடிகளை உடலில் பூசிக்கொண்டு, பேட்டை துள்ளி ஊர்வலமாக சென்றனர்.
மாலை 4:00 மணியளவில் ஐயப்ப பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி, மாலை 5:00 மணியளவில் அன்னதானம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.