/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு கோவிலில் கந்தசஷ்டி கொடியேற்றம்
/
நடுவீரப்பட்டு கோவிலில் கந்தசஷ்டி கொடியேற்றம்
ADDED : நவ 03, 2024 05:41 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவிலில் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, இரவு 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி வீதி உலா நடக்கிறது.
5ம் தேதி இரவு சிவபெருமானிடம் சூரபதுமன் வரம் பெறுதல், தாருகா சூரன் வதம் செய்தலும், 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு காமாட்சி அம்மனிடம் முருகர் சக்திவேல் வாங்கி, சிங்கமுக சூரனை வதம் செய்தல் நடக்கிறது.
7ம் தேதி கந்தசஷ்டியை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 10:00 மணிக்கு வீரபாகு தேவர்கள் ஊரில் உள்ள அனைத்து கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்கின்றனர். சூரபதுமன் நகர்வலம் வருதல் நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு வீரபாகு தேவர்கள் கம்பத்தடிக்கு ஊர்வலமாக வந்து,கம்பம் ஏறுதலும், இரவு 7:00 மணிக்கு சூரபதுமன் வதம் செய்தல் நடக்கிறது. 8ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.