/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோர்ட் உத்தரவின்படி அமைதியாக நடந்த கரும்பூர் கோவில் கும்பாபிஷேகம்
/
கோர்ட் உத்தரவின்படி அமைதியாக நடந்த கரும்பூர் கோவில் கும்பாபிஷேகம்
கோர்ட் உத்தரவின்படி அமைதியாக நடந்த கரும்பூர் கோவில் கும்பாபிஷேகம்
கோர்ட் உத்தரவின்படி அமைதியாக நடந்த கரும்பூர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 29, 2025 03:08 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கரும்பூர் பாலமுருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த கரும்பூர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தில் ஒரு குடும்பத்தினர் கோவில் விழாவில் மற்றவர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என பண்ருட்டி தாலுகாவை சேர்ந்த  பூபாலன்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி  கோவிலில் அனைவரும் நுழையவும்.வழிபடவும் அனுமதிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு அனைவரும் அனுமதிக்கப் படுகின்றனரா என்பதை அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர், புதுப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.
அதன்படி நேற்று போலீஸ், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மகாகும்பாபிஷேகம் அமைதியாக நடந்தது.