/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகர தி.மு.க., சார்பில் கருணாநிதி பிறந்த நாள்
/
நகர தி.மு.க., சார்பில் கருணாநிதி பிறந்த நாள்
ADDED : ஜூன் 04, 2025 08:55 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் கடைவீதியில் நகர தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், நகர அவை தலைவர் செங்குட்டுவன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், நகர துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், நகர பொருளாளர் மணிகண்டன், நகர துணை செயலாளர் சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர துணை செயலர் ராமு வரவேற்றார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், கருணாநிதி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார், மாவட்ட நிர்வாகிகள் அறிவுடைநம்பி, சரவணன் ,வழக்கறிஞர் ரவிச்சந்திரன், இளைஞரணி நிர்வாகிகள் தளபதிகுமார், தளபதி, நிஷாந்த், முத்துக்குமார், கார்த்திகேயன் பங்கேற்றனர். இதேப் போன்று, பாலக்கரையிலும் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினர்.