ADDED : ஆக 08, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து அமைதி பேரணியாக வந்து, நான்குமுனை சந்திப்பில், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அவை தலைவர் நந்தகோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
டேனிஷ்மெஷின் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினர். துணை சேர்மன் சிவா, துணை செயலாளர் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி கதிர்காமன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் குணசேகரன், நகர அவை தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம், துணை செயலாளர் கவுரி அன்பழகன், கவுன்சிலர் சண்முகவள்ளி பழனி உள்ளிட்டோர் பங்கேற் றனர்.