/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருப்பசாமி அறக்கட்டளை நிவாரண உதவி
/
கருப்பசாமி அறக்கட்டளை நிவாரண உதவி
ADDED : டிச 16, 2024 07:14 AM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான கிராமங்களில் மக்களுக்கு உணவு வழங்க, விநாயகபுரம் கருப்பசாமி அறக்கட்டளை சார்பில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, தாழ்வான பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால், கிராமங்களில் உணவின்றி தவிப்பிற்குள்ளான மக்களுக்கு அறக்கட்டளை சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை அறங்காவலர் கருப்புசாமி ஆறுமுகம் தலைமை தாங்கி கிராமத்தில் உள்ள தன்னார்வலர்களிடம் அரிசி உணவு பொருட்களை வழங்கினார். ஏ.வி.கே.எஸ்., அறக்கட்டளை அறங்காவலர் ராணி ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார்