/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காராமணிக்குப்பம் சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு கருவாடு விற்பனை
/
காராமணிக்குப்பம் சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு கருவாடு விற்பனை
காராமணிக்குப்பம் சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு கருவாடு விற்பனை
காராமணிக்குப்பம் சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு கருவாடு விற்பனை
ADDED : ஜன 14, 2025 06:40 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் போகி சிறப்பு சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு கருவாடு விற்பனையானது.
கடலுார் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் சந்தை கருவாடு விற்பனைக்கு பிரசித்தி பெற்றது. சந்தையில், கருவாடு தவிர, காய்கறிகள், புளி, பூண்டு, நாட்டுக் கோழி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதால் விற்பனை களைகட்டும்.
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்றைய சந்தையில் மண் பானைகள் பன்னீர் கரும்பு மாடுகளை அலங்கரிக்க கயிறுகள், சலங்கைகள் போன்றவையும் விற்பனை செய்யப்பட்டன.
சந்தையில் 500க்கும் மேற்பட்ட கடைகள் போட்டிருந்தனர். அதிகாலை 4.00 மணி முதல் கருவாடு விற்பனை களைகட்டியது.
இந்த சந்தையில் கொள்முதல் செய்யப்படும் கருவாடு, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நேற்றைய சந்தையில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கருவாடு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாட்டுக்கோழி விற்பனையும் அமோகமாக நடந்தது. காய்கறிகள், பொங்கல் பானைகள், மாட்டுக்கு அலங்காரப் பொருட்கள் வாங்கவும் அதிகளவு மக்கள் கூடியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

