ADDED : ஜன 12, 2024 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: சென்னை கவர்னர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியின் தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கவர்னர் ரவி, தன்னார்வலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் பயண அனுபவம் குறித்து பயணிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் நாச்சியப்பன், மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.