ADDED : ஏப் 02, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
பெண்ணாடம்: பெண்ணாடம் சேனைத்தலைவர் சிவசுப்ர மணியர் மடாலய கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண்ணாடம், வள்ளி தேவசேனா சமேத சேனைத்தலைவர் சிவசுப்ரமணியர் மடாலய கோவிலில், கடந்த 23ம் தேதி பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று வெள்ளாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து, செடல் அணிந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று, சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இன்று (2ம் தேதி) வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
