/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கீழத்தெரு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
/
கீழத்தெரு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ADDED : ஜூலை 27, 2025 11:17 PM

சிதம்பரம்: சிதம்பரம், கீழத்தெரு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது.
நேற்று தேரோட்டத்தையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நான்கு முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது.
தீ மிதி திருவிழாவை முன்னிட்டு இன்று (28ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அங்க பிரதட்சணம், அலகு போடுதல், பால் காவடி, பாடை பிரார்த்தனையில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவர்.
9:00 மணிக்குமேல் தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதலும், மதியம் 2 மணிக்கு மேல் அக்னி சட்டி எடுத்தலும், மாலை 5:00 தீமிதி திருவிழாவும் நடக்கிறது. 30ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், இரவு ஊஞ்சல் உற்சவமும், காத்தவராய சுவாமி கதை பட்டாபிஷேகத்துடன் விழா முடிவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் பிரேமா வீராசாமி, பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.