ADDED : நவ 19, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
கீரப்பாளையம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் காஷ்மீர் செல்வி விநாயகம், பி.டி.ஓ.,க்கள் மதன்ராஜ், அருளானந்தம் முன்னிலை வகித்தனர். மேலாளர் ஆனந்தன் வரவேற்றார்.
இளநிலை உதவியாளர் பாலு மன்ற பொருளை வாசித்தார். நிறைவு கூட்டம் என்பதால் கவுன்சிலர்கள் கண்கலங்கி காணப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் மற்றும் பணிகள் குறித்து மன்ற ஒப்புதலுக்கு வைத்தனர். அதன் பின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் அலுவலக நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் கூடத்தை திறந்து வைத்தனர்.
கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

