/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்
/
கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்
ADDED : பிப் 04, 2024 03:50 AM
மந்தாரக்குப்பம், : அண்ணா நகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க, கெங்கைகொண்டான் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கெங்கைகொண்டான் பேரூராட்சி மன்ற கூட்டம் சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்த மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக, வடக்குவெள்ளுரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் இருந்து 3 கி.மீ., துாரத்திற்கு புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பேரூராட்சி அருகே உள்ள என்.எல்.சி.,க்கு சொந்தமான அண்ணா நகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, கூட்டத்தில் திர்மானிக்கப்பட்டது. மேலும் கொசு மருந்து அடித்தல், நகரில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தலைமை இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை சேர்மன் பெலிக்ஸ், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.