/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்
/
கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்
ADDED : அக் 03, 2025 01:46 AM
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பெலிக்ஸ், செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது.
கெங்கைகொண்டான் பேரூராட்சி எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சிவாஜி நகர், மாரியம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, நமச்சிவாயம் ரைஸ்மில் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் என்.எல்.சி.,க்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக, 1500 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் என்.எல்.சி., நிர்வாகம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் தொடர்ந்து வசிக்க என்.எல்.சி., நிர்வாகம் நெய்வேலி வட்டம் 28, வட்டம் 30 ஆகிய இடங்களில் தரை வாடகை வசூலிப்பது போன்று இப்பகுதியில் தரை வாடகை நிர்ணயம் செய்ய என்.எல்.சி., மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.