தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கெடிலம் ஆற்று புதிய பாலத்தில் வசோதனை ஓட்டத்திற்கு திறப்பு

கெடிலம் ஆற்று புதிய பாலத்தில் வசோதனை ஓட்டத்திற்கு திறப்பு

கெடிலம் ஆற்று புதிய பாலத்தில் வசோதனை ஓட்டத்திற்கு திறப்பு


ADDED : செப் 18, 2026 08:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 08:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், செப் 19–

கடலுார் கெடிலம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பால பணிகள் முடிந்து நேற்று சோதனை ஓட்டத்திற்காக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகின்றது. அதன்படி, கடலுார் பெண்ணையாற்றில் புதிதாக பாலம் கட்டி முடித்து பயன்பாட்டில் உள்ளது.

ஆனால், கெடிலம் ஆற்றில் ஒரு பாலம் மட்டுமே உள்ளது. அதனையொட்டி, அண்ணா பாலம் அருகில் இருந்த பழைய இரும்பு பாலத்தை இடித்து அகற்றிவிட்டு ரூ. 22.25 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டு, இணைப்பு சாலை பணிகளும் முடிந்துள்ளது.

இந்த பாலத்தில் இருந்து செல்லும் சாலையில் ஜவான்ஸ்பவன் சாலையும் இணைக்க வேண்டும். அதற்காக மையத்தில் உள்ள ைஹமாஸ் விளக்கை சுற்றி சிறிய அளவிலான ரவுண்டானா அமைக்கப்படவுள்ளது.

தற்போது புதியவழியில் போக்குவரத்து எப்படி செல்கிறது என்பதை கண்காணிப்பதற்காக, நேற்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து ஸ்தம்பிக்காமல் சீராக செல்லுமேயானால் இதுவே நிரந்தரமாக அமையும் என நகாய் அதிகாரி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us