/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் பா.ம.க., பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு
/
விருத்தாசலம் பா.ம.க., பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு
விருத்தாசலம் பா.ம.க., பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு
விருத்தாசலம் பா.ம.க., பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 12, 2025 04:03 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தை, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் புறக்கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். கூட்டத்தில், விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபகாலமாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், விருத்தாசலத்தை சேர்ந்த பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்சாமி, நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இவர், விருத்தாசலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆவார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், விருத்தாசலம் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வந்தால், தவறாமல், கோவிந்தசாமி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
கட்சியின் இரண்டாம் கட்ட தலைவராக கோவிந்தசாமி உள்ள நிலையில், ராமதாசுடன் தொடர்ந்து பயணித்தவர்.
இதேப் போன்று, மாநில மகளிரணி பொறுப்பாளர் தமிழரசி உள்ளிட்ட விருத்தாசலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கூட்டத்தை புறக்கணித்தது பா.ம.க, வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.