/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கீழ்மாம்பட்டு பள்ளி 12ம் ஆண்டாக சாதனை
/
கீழ்மாம்பட்டு பள்ளி 12ம் ஆண்டாக சாதனை
ADDED : மே 22, 2025 11:27 PM
நடுவீரப்பட்டு: கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தொடர்ச்சியாக 12வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த 39 மாணவர்கள் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலமாக இப்பள்ளி தொடர்ந்து 12வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சியை தக்க வைத்து சாதனை படைத்துள்ளது.
மாணவர்கள் வேல்முருகன் 468 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், அன்புமணி 460 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், கலைச்செல்வன் 455 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி, பெற்றோர் ஆசிரயர்கள் கழகத் தலைவர் ஜெயராமன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சீதா பாராட்டினர்.