ADDED : மார் 19, 2026 04:27 AM

கடலுார்: கடலுார் துறைமுகம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு புதுச்சேரி வெங்கடேஸ்வரா பல் மருத்துவக்கல்லுாரி கதிர்வீச்சியல் மற்றும் பல்மருத்துவ துறைத்தலைவர் லஷ்மண் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி பாலாஜி வித்யாபீடம் பல்கலைக்கழகம் இந்திராகாந்தி பல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் உமாமகேஸ்வரி கிரி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
விழாவிற்கு பள்ளித்தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், நிர்வாக செயல்அலுவலர் லட்சுமி சிவக்குமார், மக்கள் தொடர்புஅலுவலர் சிவராஜ், டாக்டர்கள் ஜெயசூர்யா மற்றும் நந்தினி, ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் விழாவில் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் ஆண்டறிக்கை வாசித்தார்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
