/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
/
கொளஞ்சியப்பர் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
கொளஞ்சியப்பர் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
கொளஞ்சியப்பர் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
ADDED : நவ 18, 2024 06:54 AM

விருத்தாசலம் ; விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், வெங்கடேஸ்வரா கல்வி குழும தாளாளர் வெங்கடேசன், உதவி ஆணையர் சந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் நீதிராஜன் வரவேற்றார்.
இதில், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் கனக கோவிந்தசாமி, வேல்முருகன், நகர வர்த்தகர் சங்க தலைவர் கோபு, அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், செயல் அலுவலர் பழனியம்மாள், வழக்கறிஞர் அருள்குமார், நகராட்சி கவுன்சிலர் சிங்காரவேல் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், வர்த்தகர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், கோவில் திருப்பணிக்கு 2.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறித்து அறிவித்தனர். மேலும் கோவில் திருமண மண்டபம், புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் நிதி பெற்ற அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்ட்டது.
இதற்கு அமைச்சர் கணேசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கூறி, நிதியை பெற்றுத் தருவதாக உறுதி யளித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் கணேசன் கோவில் திருப்பணிக்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 11 ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அதேபோல், பக்தர் ஒருவர் ரூ.2 லட்சம் ரொக்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் ரூ.1 லட்சம் கசோலை வழங்கினர்.