‘தமிழ்’ மொழிக்கு வந்த சோதனை பெண்ணாடம் பேரூராட்சியில் ‘கூத்து’
‘தமிழ்’ மொழிக்கு வந்த சோதனை பெண்ணாடம் பேரூராட்சியில் ‘கூத்து’
ADDED : செப் 08, 2026 03:40 PM

அ நிறம் | அளவு
தமிழை ஆட்சி மொழியாக கொண்ட தமிழகத்தில் தமிழை வளர்க்க அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் சார்ந்த போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
அவ்வாறு தமிழ் மொழியை வளர்க்கும் நிலையில், மாவட்டத்தின் கடைகோடி பேரூராட்சியாக உள்ள பெண்ணாடத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில், சுகாதார வளாகம் என எழுதுவதற்கு பதில் ‘சுகாதர வளகம்’ என எழுதப்பட்டுள்ளது. இதை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் தமிழுக்கு வந்த சோதனை என அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இவ்வாறு தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டால் ‘தமிழ்’ இனி மெல்ல சாகும் என புலம்பி வருகின்றனர்.
