/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அசத்தல்
/
கிருஷ்ணசாமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அசத்தல்
ADDED : மே 17, 2025 04:02 AM

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி வர்ஷிதா 500க்கு 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், மாணவர் கீர்த்திவேலன் 490 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி சுபலட்சுமி 485 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
மாணவி வர்ஷிதா அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திலும், மாணவர்கள் சைலேஷ், விக்னேஷ்வரன் அறிவியல் பாடத்திலும், மாணவர் கீர்த்திவேலன் சமூக அறிவியல் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
தேர்வு எழுதியவர்களில் 330 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். 490க்கு மேல் இரண்டு பேர், 480க்கு மேல் 11 பேர், 470க்கு மேல் 23 மாணவர்கள், 450க்கு மேல் 49 பேர், 400க்கு மேல் 117 மாணவர்கள் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் ராஜேந்திரன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் சிரீஷா கண்ணன், பள்ளி முதல்வர் நடராசன் உடனிருந்தனர்.
பள்ளி தாளாளர் ராஜேந்திரன் கூறுகையில், '490க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பிளஸ் 1ல் சேர முழு கட்டண விலக்கும், 475க்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு 50 சதவீதம், 450க்கும் மேல் பெற்ற மாணவர்களுக்கு 25 சதவீதம் கட்டண விலக்கு அளிக்கப்படும்'என்றார்.