ADDED : ஏப் 17, 2026 11:30 PM

விருத்தாசலம்:விருத்தாசலம் கே.எஸ்.ஆர்., ைஹடெக் பள்ளி 14ம் ஆண்டு, ஆண்டுவிழா மற்றும் 'ஸ்ம்ரிதி' நியூஸ் லெட்டர் வெளியீடு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். செயலர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.
ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கினார்.
முக்கிய நிகழ்வாக, பள்ளியின் செயல்பாடுகளை தொகுத்து உருவாக்கப்பட்ட 'ஸ்ம்ரிதி' என்ற நியூஸ் லெட்டர் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், பல்வேறு உலக நாடுகளின் பாரம்பரிய உடை அணிந்து மாணவர்கள் நடனமாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இதில், பள்ளி இயக்குனர் ரஞ்சித், நிர்வாக அலுவலர் ஆன்ந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி முதல்வர் பெட்ரிஷியா செபஸ்டியன் நன்றி கூறினார்.
