/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.பி.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு
/
எஸ்.பி.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு
ADDED : அக் 26, 2024 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி.,மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள் நெய்வேலி என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில் ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி., மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 9 ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் 14 வயதுக்குட்பட்டோருக்கான வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அவர், மாநில அளவிலான போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.
மாணவரை பள்ளி சேர்மன் முரளிதரன், தாளாளர் பத்மா, உடற்கல்வி ஆசிரியர் சத்யா, மாணவரின் பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.