/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளுக்கு பாராட்டு
/
ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளுக்கு பாராட்டு
ADDED : நவ 13, 2024 09:06 PM

புவனகிரி ; ரத்ததானம் மற்றும் சமூக சேவையில் சிறப்பாக செயல்படும் புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளுக்கு கலெக்டர் பாராட்டு சான்று வழங்கினார்.
ரத்ததானம் மற்றும் உடல் தானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில ஈடுபடும் சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஊக்கப்படுத்தி, ஆண்டு தோறும் தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டவர்களை பாராட்டி, கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.