/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மவுண்ட் லிட்ரா பள்ளி மாணவிக்கு பாராட்டு
/
மவுண்ட் லிட்ரா பள்ளி மாணவிக்கு பாராட்டு
ADDED : நவ 18, 2024 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் ; தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் பங்கேற்க தேர்வான கடலுார் மவுண்ட் லிட்ரா ஸீ் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோயம்புத்துாரில் 34வது தமிழ்நாடு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி சாம்பியன் சப் ஜூனியர் போட்டி நடந்தது. இதில், பெண்கள் பிரிவில் கடலுார் அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
இப்போட்டியில் கடலுார் அணி சார்பில் விளையாடிய மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி பிரகதீஷ்ஸ்ரீ, சிறப்பாக விளையாடி தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
இவரை பள்ளித் தாளாளர் கவிதா கண்ணன், பள்ளி முதல்வர் அப்துல் சுபஹான் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.