/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 11, 2024 06:19 AM

கடலுார்: பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற லட்சுமி சோரடியா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக ஐ.இ.சி.டி., தேர்வில் மாணவி வர்ஷா முதலிடம், மாணவர் தர்ஷன், கிராபிக் டிசைன் பிரிவில் முதலிடம் பிடித்தனர். மேலும், மூன்று தலைமுறை அமைப்பினால் நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் கையெழுத்து போட்டியில் 17 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். பள்ளி அளவில் மாணவி மான்விழி முதலிடம் பிடித்தார். கிங்ஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட வேத கணிதம் தேர்வில் 33 மாணவ மாணவியர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விாவில், பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா மற்றும் தாளாளர் சந்தோஷ்மல் சோர்டியா, உதவி தலைமையாசிரியர் பாதாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் பங்கேற்று மாணவிகளை பாராட்டினர்.