/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
/
மாநில போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
மாநில போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
மாநில போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : நவ 21, 2024 06:09 AM
நடுவீரப்பட்டு: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான, பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், நடுவீரப்பட்டு அருகே வி.காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 17 வயதிற்குட்பட்ட கால்பந்து போட்டியிலும், 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
இந்த மாணவ, மாணவிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மகேஷ்குமார் ஆகியோரை, தலைமை ஆசிரியர் வடிவேல் பாராட்டினார்.