/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒறையூர் கிராமத்தில் 31 அடி உயர விஸ்வரூப முருகர் சிலைக்கு கும்பாபிேஷகம்

ADDED : ஜன 22, 2024 12:52 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த ஒறையூர் கிராமத்தில் 31அடி உயர விஸ்வரூப சிவசுப்ரமணிய சுவாமிக்கு மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த ஒறையூர் கிராமம் தாமரைக்குளத்தில் சக்திவிநாயகர், பவானி அம்மன், வள்ளிதேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் 31 அடி உயர விஸ்வரூப சிவசுப்ரமணிய சுவாமிக்கு கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி கடந்த 19 ம்தேதி மாலை 5:00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்துசாந்தியுடன் விழா துவங்கியது.
மாலை 6:30 மணிக்கு கலசஸ்தபானம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை. கடந்த 20ம் தேதி காலை 8:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, மாலை 4:00 மணிக்கு 3ம் காலயாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.
நேற்று 21ம்தேதி காலை 7:00 மணிக்கு 4ம் காலயாகசாலை பூஜை,நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, ப்ரண சகித ஷடாட்சர ேஹாமம், மகாபூர்ணாஹூதி, யாத்ரதானம், கடம்புறப்பாடாகி ஆலயம் வலம் வருதல்.
காலை 9:00 மணிக்கு 31 அடி விஸ்வரூப சிவசுப்ரமணியசுவாமிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.