தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிரளய காலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பிரளய காலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பிரளய காலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்


ADDED : பிப் 11, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளய காலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமர்மையாக நடந்தது.

கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், 6:00 மணியளவில் பரிவார யாக சாலைகள், கடம் புறப்பாடாகி காலை 7:00 மணியளவில் குடக்கரை விநாயகர், தேரடி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

9:00 மணிக்கு பிரதான யாகசாலை நிறைவு, யாத்ரா தானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி, 10:15 மணிக்கு திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின், மூலவர் கோபுரத்தில் ஏழு நிலையில் உள்ள கலசங்கள், அழகிய காதலி அம்மன் சன்னதி கோபுரம், ராஜகோபுரம், வினைதீர்த்த விநாயகர், சுப்ரமணியர், துர்க்கை, கொடிமரம், நடராஜர் சன்னதி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us