/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பு.முட்லுாரில் கும்பாபிஷேகம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு
/
பு.முட்லுாரில் கும்பாபிஷேகம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு
பு.முட்லுாரில் கும்பாபிஷேகம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு
பு.முட்லுாரில் கும்பாபிஷேகம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு
ADDED : பிப் 04, 2025 12:50 AM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் மகா கைலாயத்தில், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு தசமகாவித்யா தேவிகள், நவதுர்கா தேவிகள், அஷ்டலஷ்மி தேவிகள் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
அதையொட்டி நேற்று முன்தினம் தேவதா பிராத்தனை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை யாகசாலை பூஜைகள், ரஷாபந்தன பிம்ப சுத்தி தீபாராதனை நடந்தது. காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தில், சுவாமி கோடீஸ்வரனந்தா, விஜயராகவன், ராம்ஜெயராம், கல்யாணி குருமூர்த்தி, கருணாகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.