/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 05, 2025 03:24 AM

புவனகிரி:மேல் புவனகிரி மீனாட்சி உடனுறை வேதபுரீஸ்வரர் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புவனகிரி வட்டம், மேல் புவனகிரி மீனாட்சி உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த 1ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 2ம் தேதி பல்வேறு பூஜைகளுக்கு பின் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.
3ம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று கோ பூஜை, நான்காம் யாக சாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடு துவங்கி, விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் ஓய்வு பெற்ற மருத்துவ டாக்டர் பேராசிரியர் செந்தில்வேலன், காஞ்சனா செந்தில்வேலன், ஸ்ரீஹர்சிஷி, வேலுார் சி.எம்.சி., டாக்டர்கள் லோகேஷ், ஹர்ஷிதா உள்ளிட்ட உபயதாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.