/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேவநாத சுவாமி கோவிலில் 2ம் தேதி கும்பாபிேஷகம்
/
தேவநாத சுவாமி கோவிலில் 2ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : ஜன 31, 2025 08:06 AM

கடலுார்; கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிேஷகம் நாளை மறுநாள் 2ம் தேதி நடக்கிறது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிேஷகத்திற்கான திருப்பணிகள் நடந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது.
இன்று (31ம் தேதி) காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணிக்கு 5ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. நாளை 1ம் தேதி காலை 5:30 மணிக்கு 6ம் கால யாக சாலை பூஜை, 10:30 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனம், மாலை 5:30 மணிக்கு 7ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.
வரும் 2ம் காலை விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான மகா பூர்ணாஹூதி நடந்து, காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, வேத, திவ்ய பிரபந்த சாற்று மறை நடக்கிறது. இரவு தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடக்கிறது.

