
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் கிராமத்தில் முத்துமாரியம்மன்கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம். தீபாராதனையும், மாலை 6.00 மணிக்கு அங்குரார்பணம், முதல்கால யாக வேள்வி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து நேற்று காலை 6.00 மணிக்கு கோ பூஜை, நாடிசந்தானம், இரண்டாம் கால யாக வேள்வியும், , காலை 9.15 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பாடாகி காலை 10.00 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகமும், 10.30 மணிக்கு மூலவர் முத்துமாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது.

