ADDED : ஏப் 09, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
கடலுார்: திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது.
கடலுார் அடுத்த வசந்தராயன் பாளையத்தில் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 11ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமத்தை தொடர்ந்து அன்று இரவு முதல் கால யாகசாலை பூஜை நடக்க உள்ளது.
வரும், 12ம் தேதி காலை இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து ரக் ஷா பந்தனம், சாந்தி கலச பூஜை, தத்துவார்ச்சானை, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்படாகி 9:45மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு திரவுபதியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
