ADDED : ஆக 30, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
புவனகிரி: பெரியதேவங்கர் தெருவிலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.
புவனகிரி பெரியதேவங்கர் தெருவிலுள்ள திரவுபதி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. நேற்று இரண்டாம் கால யாக சால பூஜை, வஸோத்தாரா ஹோமம் பூர்ணாகுதி, தீபாராதனை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளுக்குப் பின் கடம்புறப்பாடு துவங்கி, காலை 8.16 மணிக்குள் மேல் 9.15க்குள், விமானம் மற்றும் மூவலருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. சுற்று பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.
