தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொலை வழக்குகளில் 4 பேருக்கு குண்டாஸ்

கொலை வழக்குகளில் 4 பேருக்கு குண்டாஸ்

கொலை வழக்குகளில் 4 பேருக்கு குண்டாஸ்


ADDED : செப் 21, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், செப். 23–

நெய்வேலி மற்றும் குறஞ்சிப்பாடி கொலை வழக்குகளில் கைதானவர்களில் 4 பேர் குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நெய்வேலி மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர் நரேஷ் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வடக்குத்து கோபி உள்ளிட்ட கும்பல், ஆனந்தராஜை கத்தியால் வெட்டினார். அதனை தடுக்க முயன்ற நரேஷ் கொல்லப்பட்டார். நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து கோபி, வினோத்குமார், தில்சன்குமார், சக்கரை (எ) சுரேஷ் உட்பட 18 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்றொரு வழக்கு

குறிஞ்சிப்பாடியில் வீட்டின் அருகே மது அருந்தியதை கண்டித்த விஜயகுமார் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் அன்பரசு,19; ரவிக்குமார், பிரவீன்குமார், மணிகண்டன் ஆகியோரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர்.

கலெக்டர் உத்தரவு

கொலை வழக்குகளில் கைதானவர்களின், தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையை ஏற்று, நெய்வேலி கொலை வழக்கில் வடக்குத்து வினோத்குமார் 25; தில்சன்குமார் 19, சக்கரை (எ) சுரேஷ் 22, ஆகியோரையும், குறிஞ்சிப்பாடி கொலை வழக்கில் அன்பரசு,19; ஆகிய நான்கு பேரையம், குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுகளை, கடலுார் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் குறிஞ்சிப்பாடி போலீசார் நேற்று வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us