/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா பதுக்கி விற்ற வாலிபருக்கு 'குண்டாஸ்'
/
கஞ்சா பதுக்கி விற்ற வாலிபருக்கு 'குண்டாஸ்'
ADDED : நவ 30, 2024 06:00 AM

திட்டக்குடி; திட்டக்குடியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், கடந்த 16ம் தேதி ரோந்து சென்றனர்.
அப்போது, வதிஷ்டபுரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்ற, வதிஷ்டபுரம், காலனியைச் சேர்ந்த அரசன் மகன் ஆங்கி (எ) ராதாகிருஷ்ணன், 28, என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்தது தெரிந்தது.
போலீசார் அவரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது திட்டக்குடி போலீசில் கஞ்சா, வழிப்பறி, சூதாட்டம் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின்பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தில் ராதாகிருஷ்ணனை கைது செய்ய உத்தரவிட்டார்.
கடலுார் மத்திய சிறையில் உள்ள ராதாகிருஷ்ணனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.