/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா வழக்கில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'
/
கஞ்சா வழக்கில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'
ADDED : நவ 12, 2024 08:18 AM

கடலுார்: விருத்தாசலம் அருகே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர், தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
விருத்தாசலம் கலால் சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் கடந்த அக்., 16ம் தேதி, விருத்தாசலம் மின் மயானம் அருகே ரோந்து சென்றனர்.
அங்கு, தொழுதுாரை சேர்ந்த கருணாநிதி மகன் சக்திவேல், 25, புலிகரம்பலுாரை சேர்ந்த பொன்முடி மகன் மணிவண்ணன், 23, சவுந்திரபாண்டியன் மகன் கார்த்தி, 23, ஆகியோர், கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மூவரையும் கைது செய்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், வேப்பூர் போலீசில் கஞ்சா வழக்கு உள்ளது.
இவர்களின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடம் வழங்கப்பட்டது.