குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 18, 2026 04:24 AM
கடலுார்: குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டத்தில் விவசாயிகள் பலனடைய வேளாண்துறை அழைப்புவிடுத்துள்ளது.
குமராட்சி வேளாண் உதவிஇயக்குனர் தமிழ்வேல் செய்திக்குறிப்பு:
குமராட்சி வட்டாரத்தில் தற்போது குறுவை பட்ட நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், 4ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் குறுவை பருவத்தில் இயந்திரம் மூலம் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் பின்னேற்பு மானியமாக அதிகபட்சமாக ஒரு விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் என்ற அளவில் விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு மேற்கொள்ளவும் அல்லது இ-சேவை மையத்தில் பதிவு செய்து விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி புத்தக முன் நகல், இயந்திர நடவு ரசீது, நேரடி நெல் விதைப்புக்கு நிலம் சமப்படுத்தப்பட்டு விதைப்புக்கான ரசீது புவியிடக்குறியீட்டுடன் புகைப்படம் போன்ற ஆவணங்கள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 ஏக்கருக்கு தேவையான வேளாண் இடுபொருட்களான நெல் நுண்ணூட்ட கலவை உரம், திரவ உயிர் உரங்கள் போன்றவை 50 சதவீத மானியத்திலும் புதிய நெல் ரகங்களான டி.பி.எஸ்., 5, கோ.,55 போன்றவைக்கு ஒரு கிலோ விதைக்கு 20ரூபாய் மானியத்திலும் பழைய ரக நெல் விதை ஏ.எஸ்.டி., 16 போன்றவை ஒரு கிலோ விதைக்கு 10 ரூபாய் மானியத்திலும் குமராட்சி மற்றும் அம்மாபேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைத்து வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
