/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
27 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் துறை அதிரடி
/
27 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் துறை அதிரடி
27 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் துறை அதிரடி
27 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் துறை அதிரடி
ADDED : நவ 22, 2025 07:32 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத 27 கடைகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டு பணிபுரியும் பணியாளர்கள், பணியிடையே அவர்கள் அமர்வதற்கு ஏற்ப இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது, நடைமுறையில் உள்ளது. இதுதொடர்பாக கடலுார் மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி உள்ளதா என, தொழிலாளர் துறை அதிகாரிகள் 2 நாட்கள் ஆய்வு செய்தனர். இதில், இருக்கை வசதி ஏற்படுத்தி தராத 27 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, அனைத்து நிறுவன உரிமையாளர்களிடம் இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இத்தகவலை கடலுார் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார்.

