தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாலம் தடுப்பு சுவரில் துாங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலி

பாலம் தடுப்பு சுவரில் துாங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலி

பாலம் தடுப்பு சுவரில் துாங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலி


UPDATED : ஆக 20, 2026 10:16 PM

ADDED : ஆக 20, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 10:16 PM ADDED : ஆக 20, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்:பாலம் தடுப்பு சுவரில் துாங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம்,55; விவசாய தொழிலாளி. இவர் கடந்த 14ம் தேதி இரவு குருங்குடி காத்தாயி அம்மன் கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தை பார்க்க சென்றார்.

பின்னர் கோவில் அருகில் உள்ள வடவாறு பாலம் தடுப்பு கட்டையில் மது போதையில் படுத்து துாங்கியபோது, தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.

அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் விஜய் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us